சென்னையை தொடர்ந்து மதுரை விமான நிலையத்திலும் கடத்தல் தங்கம் பறிமுதல்
சென்னையை தொடர்ந்து மதுரை விமான நிலையத்திலும், 2 பயணிகளிடம் சுமார் ரூ.29 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் நேற்று மட்டும் ரூ.1.76 கோடி மதிப்புள்ள 5.33 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. குறிப்பாக, 14 பெண் பயணிகளிடம் இருந்து ரூ.1.2கோடி மதிப்புள்ள 3.64 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், மதுரை விமானத்தில் 2 பயணிகளிடம் ரூ.28.72 லட்சம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இலங்கையிலிருந்து வந்த ரியாஸிடம் 395 கிராமும், பார்த்திபன் என்பவரிடம் 500 கிராமும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முகத்தை மறைக்கும் 'புர்கா' உள்ளிட்ட ஆடைகளுக்கு இலங்கை அரசு தடை - இன்று முதல் அமல்