பேஷன் ஷோவில் மயங்கி விழுந்த பிரபல மாடல் அழகி மரணம்
பிரேசிலில் நடந்த பேஷன் ஷோவில் பங்கேற்ற பிரபல மாடல் அழகி திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.
பிரேசிலின் சாவோ பாலோ நகரில் மாடல் அழகிகளின் அணிவகுப்பு நடைபெற்றது. அந்த பேஷன் ஷோ பல பிரபல பிரேசில் மாடல் அழகிகள் பங்கேற்றனர். பிரபல பிரேசில் மாடலான டெல்ஸ் ரோரசும் அதில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடந்த கேட் வாக் எனப்படும் பூனை நடையை மாடல் அழகிகள் நடந்து வந்தனர்.
மாடல் அழகி டெல்ஸ் ரோரஸ் கேட் வாக் செய்தார். அப்போது யாரும் எதிர்பாராத நிலையில் டெல்ஸ் ரோரஸ் மயங்கி விழுந்தார். அதில் அவருடைய முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. டெல்ஸ் ரோரஸ் மயங்கி விழுந்ததை யாரும் முதலில் சீரியசாக எடுத்து கொள்ளவில்லை. சிறிது நேரம் சென்ற பிறகே உண்மையை உணர்ந்தனர்.
இதனையடுத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் விரைந்து சென்று டெல்ஸ் ரோரஸை மீட்டு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் டெல்ஸ் ரோரஸ் இறந்து விட்டதாக அறிவித்தனர்.
பேஷன் ஷோவில் பிரபல மாடல் அழகி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நல்ல கொழுப்பு எவற்றில் உள்ளது?