10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 95.2 சதவீதம் தேர்ச்சி! முதல் இடத்தில் திருப்பூர் மாவட்டம்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில், 97 சதவீத மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.93.3 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஆண்டும், மாணவர்களைவிட மாணவியர்கள் 3.7 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வெழுதிய ஒன்பது லட்சத்து, 97 ஆயிரம் மாணவர்களில் மொத்தம் 95.2 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் 98.53 சதவீதம் தேர்ச்சி பெற்று முதல் இடத்தையும், ராமநாதபுரம் மாவட்டம் 98.48 சதவீத தேர்ச்சியுடன் இரண்டாம் இடத்தையும், நாமக்கல் மாவட்டம் 98.45 சதவீதம் தேர்ச்சியுடன் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. மேலும், கன்னியாகுமரி- 98.08 சதவீதம், கோவை- 96.44 சதவீதம், ஈரோடு-98.41 சதவீதம், பெரம்பலூர் – 97.33 சதவீதம், விருதுநகர்- 97.92 சதவீதம் நெல்லை- 96.33 சதவீதம், தூத்துக்குடி- 96.95 சதவீதம், கரூர்- 95.61 சதவீதம், சிவகங்கை- 97.42 சதவீதம், மதுரை- 97.29 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 12,548. இதில், 6100 பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் 92.48 சதவீதம் அரசு பள்ளிகள் தேர்ச்சி பெற்றுள்ளன. தமிழ் மொழி பாடத்தில் 96.12 சதவீதம், ஆங்கிலம் 97.35 சதவீதம், கணிதம் 96.46 சதவீதம், அறிவியல் 98.56 சதவீதம் மற்றும் சமூக அறிவியல் பாடத்தில் 97.07 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! –மாணவிகளே ‘டாப்’
More News >>