இந்த பெண்ணின் வெற்றி கதை நமக்கு ஒரு பாடம் ஹர்பஜன் சிங் ட்வீட்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், தமிழில் ட்வீட் போட்டு ட்விட்டரில் தமிழ் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில், நேற்று தமிழகத்தின் தங்கமங்கை கோமதி குறித்தும் ஒரு ட்வீட் போட்டு வைரலாக்கியுள்ளார்.

”பசித்த வயிறு. பணமில்லா வாழ்க்கை.உதவ ஒருவரும் இல்லை.ஆனால் இந்த பெண்ணின் வெற்றி கதை நமக்கு ஒரு பாடம்.நம்பிக்கை வெற்றியோடு வரும் ஆனால் வெற்றி நம்பிக்கை உள்ளவர்களிடம் மட்டுமே வரும் என்பதற்கு கோமதி மாரிமுத்து ஒரு சாட்சி” என்ற ட்வீட்டை ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவிற்கு தங்க பதக்கம் வாங்கி தந்த கோமதி மாரிமுத்து குறித்து சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. அவர், கிழிந்த ஷூவை அணியவில்லை என்றும் கிழிந்த ஷூவை அணிந்து ஓடினார் என்றும் அவருக்கு அரசு உதவவில்லை என்றும் அவருக்கு அரசு உதவியது என்றும் கருத்து மோதல்கள் வெடித்து வருகின்றன.

இந்நிலையில், ஹர்பஜன் சிங்கும் கோமதி மாரிமுத்து குறித்து பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மே.வங்கத்தில் வாக்குப்பதிவில் வன்முறை - போலீசாருடன் திரிணாமுல் கட்சியினர் அடிதடி
More News >>