நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றம் மீது வைரஸ் கிருமி தாக்குதல்..! கூட்டணி அரசுதான் தேவை..! - மகேந்திரா சேர்மன் பளிச்

வைரஸ் கிருமியின் நோய்த் தொற்று தாக்குதல் போல், நாட்டின் வளர்ச்சியும், முன்னேற்றமும் தடைபட்டுள்ளது. மத்தியில் கூட்டணி அரசு அமைந்தால் தான் நாடு முன்னேறும் என்று மகேந்திரா நிறுவன சேர்மன் ஆனந்த் மகேந்திரா பகிரங்கமாக பாஜக அரசை விமர்சித்துள்ளார்.

கடந்த 5 ஆண்டு கால பாஜக அரசில் தொழில் துறை மிக மோசமான நிலைக்கு சென்று விட்டது என்றும், பொருளாதார நிலையும் மேம்படவில்லை என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் தான் முன்வைத்து வருகின்றன. இந்நிலையில் இந்தியாவின் பிரபல தொழில் நிறுவனமான மகேந்திரா நிறுவனத்தின் சேர்மன் ஆனந்த் மகேந்திரா பகிரங்கமாக வைத்துள்ள குற்றச்சாட்டு பாஜக தரப்பை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

மும்பையின் மலபார் ஹில் பகுதி வாக்குச் சாவடியில் வாக்களித்த பின், ஆனந்த் மகேந்திரா செய்தியாளர்களிடம் பேசுகையில் தான் தமது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். வைரஸ் நோய்க் கிருமி தாக்குதலால் நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றம் தடைபட்டு நாட்டு மக்கள் அனைவருமே பாதிப்புக்கு ஆளாக்கப்பட்டுள்ளோம். நாட்டில் கூட்டணி அரசு அமைந்தால் மட்டுமே வளர்ச்சியும், முன்னேற்றம் சாத்தியமாகும் என்று ஆனந்த் மகேந்திரா வெளிப்படையாக , பாஜக அரசு வேண்டாம். கூட்டணி அரசு தான் நல்லது என்பது போல் கூறியிருப்பது பாஜக தரப்பை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தொழிலாளி மீது சிறுநீரை தெளித்து துன்புறுத்திய சாதி வெறியர்கள்
More News >>