ஆட்டோக்களில் ஜி.பி.எஸ். கருவியுடன் கட்டண மீட்டர்- தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

ஆட்டோக்களில் ஜி.பி.எஸ். கருவியுடன் கூடிய கட்டண மீட்டரை பொருத்தக்கோரி தொடரப்பட்ட பொதுநல மனு தொடர்பாக பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது, பயணிகளிடம் தவறாக நடப்பது போன்றவற்றை தடுப்பதற்காக ஜி.பி.எஸ். மீட்டர்கள், பேனிக் பட்டன் ஆகியவற்றை பொருத்த தமிழக அரசு உத்தரவிட்டது. ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்த போது இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.

இதற்காக ஆட்டோக்களுக்கு தமிழக அரசே இலவசமாக ஜி.பி.எஸ். மீட்டர் வழங்கியது. ஆனால் ஜி.பி.எஸ். மீட்டர்கள் தட்டுப்பாடு மற்றும் ஆட்டோக்கள் ஓட்டுனர்கள் எதிர்ப்பு போன்ற காரணங்களால் இந்த திட்டம் செயல்படுத்தப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு, நாடு முழுவதும் பஸ்கள், வாடகைகார்கள், ஆட்டோக்கள் போன்ற வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி கட்டாயம் பொருத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மாநில அரசுகள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பியது. ஆனாலும் மத்திய அரசின் உத்தரவு முறையாக செயல்படுத்தவில்லை.

இந்த சூழ்நிலையில், ஆட்டோக்களில் ஜி.பி.எஸ். கருவியுடன் கூடிய கட்டண மீட்டரை பொருத்த உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, இந்த மனு தொடர்பாக பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

என்ஜிகே ட்ரெய்லர் எத்தனை மணிக்கு ரிலீஸ் தெரியுமா?
More News >>