நாளை அதி தீவிர புயலாக மாறுகிறது ஃபோனி..! புயல் காற்று உஷார்
வட தமிழகத்தில் ஃபோனி புயல் காரணமாக 70 கி.மீ., வேகத்தில் புயல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான ஃபோனி புயல் தீவிர புயலாக வலுப்பெறும். ஆனால், புயல் தமிழக கரையைக் கடக்காது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. சென்னையின் தென்கிழக்கே 1,050 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்த ஃபோனி புயல் தற்போது தீவிர புயலாக வலுப்பெற்று உள்ளது. சென்னைல் இருந்து தற்போது 870 கி.மீ.,தூரத்தில் நிலை கொண்டிருக்கும் ஃபோனி இன்று தீவிரப்புயலாகவும் நாளை அதி தீவிரப் புயலாகவும் மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குநர் பாலச்சந்திரன் கூறினார்.
மேலும், வங்கக்கடலின் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் ஃபோனி புயல் ஏப்ரல்., 30ம் தேதி அதாவது, நாளை மற்றும் நாளை மறுநாள்(மே 1) ஆகிய நாட்களில் வடதமிழகம் - தெற்கு ஆந்திரப் பகுதியில் இருந்து சுமார் 300 கி.மீ., துாரம் வரை வந்து நகர்ந்து செல்லும். அப்போது, வட தமிழகத்தில் மிதமானது முதல் கன மழை பெய்யக்கூடும். இந்த புயல் காரணமாக, 40 முதல் 50 கி.மீ., வரை புயல் காற்று வீசும். வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் 60 கி.மீ., முதல் அதிகபட்சம் 70 கி.மீ., வரையில் புயல் காற்று வீச வாய்ப்பு உள்ளதாக பாலச்சந்திரன் தெரிவித்தார்.
நாளை மாலை நேரத்தில் புயல் காற்று வீசக்கூடும் என்பதால் மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஃபோனி புயல் ஒடிசா மாநிலத்தில் கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தந்தையை கதிகலங்க செய்வதற்காக...எடப்பாடி பழனிசாமிக்கு கொலை மிரட்டல்! –‘பகீர்’ தகவல்