இதற்கு மேலும் தூங்கி கொண்டிருப்பதா...? முதல்வரை விளாசிய டிடிவி தினகரன்
முல்லை பெரியாறில் புதிய ஆணை கட்டுவதற்கான முயற்சியில் கேரள அரசு தீவிரமாக இறங்கி உள்ளது. இதற்கு, ஏற்றார்போல் சுற்றுச்சூழல் தாக்கம் தொடர்பான ஆய்வை தொடங்குவதற்குக் கேரள வனத்துறை அனுமதி அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதோடு, முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் வாகன நிறுத்த மையம் அமைக்கவும் கேரள அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், முல்லை பெரியாறு நீர்த்தேக்கப் பகுதியான ஆனவச்சாலில் நீதிமன்றத்தின் தடையை மீறி கேரள அரசு வாகன நிறுத்துமிடத்திற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்வதாக செய்திகள் வெளியாகும் நிலையில், அதை மத்திய மாநில அரசுகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதோடு, முல்லை பெரியாறு ஆணை தொடர்பான தமிழகத்தின் முயற்சியை கேரள அரசு தடுத்து வருகிறது. இந்த விவகாரத்தில், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டிப் போட்டுக் கொண்டு தமிழகத்தை வஞ்சித்து வருகின்றன. சமீபத்திய தேர்தல் பிரசாரத்தில் முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்டுதல், வாகனங்கள் நிறுத்தும் இடம் அமைத்தல் ஆகியவற்றை இந்த கட்சிகள் வாக்குறுதிக்காக மக்களிடம் கூறியுள்ளன. இந்நிலையில், அணை பகுதியில் வாகன நிறுத்த மையம் அமைக்க கேரள அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. கோடை விடுமுறைக்குப் பிறகு, தமிழகத்தின் வழக்கை விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ள நிலையில், கேரள அரசு இந்த முயற்சியை எடுத்து, அதற்கான பணிகளை முழு வேகத்தில் செய்து வருகிறது.
இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி அரசு மெத்தனம் காட்டாமல் உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மனுவை தாக்கல் செய்ய வேண்டும். லேசத்திற்கு மட்டுமே முதலமைச்சராக இருந்து கொண்டு மற்ற பகுதிகள் குறிப்பாகத் தென் தமிழக மாவட்டங்களைப் பழிவாங்கும் நோக்கில் செய்யப்படும் எடப்பாடி பழனிசாமி இதற்கு மேலும் தூங்கிக் கொண்டிருக்கக் கூடாது. இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.
அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்பாளர்களின் அரசியல் சதுரங்க ஆட்டம் பற்றி தெரியுமா?