கொஞ்சம் கருணை காட்டுங்கள் மெலானியாhellipட்ரம்ப் பாவம்!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் தன் மனைவி மெலானியா ட்ரம்ப்பின் கைக்கோர்க்க நினைத்து எடுத்த முயற்சி தோல்வியிலேயே முடிந்தது. இந்த வீடியோ தற்போது உலக வைரல் லிஸ்ட் ஹிட்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று தன் மனைவி மெலானியா ட்ரம்ப் உடன் ஒஹாயோ மாகாணத்துக்கு வெள்ளை மாளிகையில் இருந்து கிளம்பினார். வெள்ளை மாளிகையிலிருந்து ஹெலிகாப்டர் தளம் நோக்கி ட்ரம்ப் தன் மெலானியா உடன் நடந்து வந்தார். அப்போது மஞ்சள் நிற மேல் கோட்டை அணியாமல் போர்த்தி இருந்தார் மெலானியா. இதனால் மேல் கோட்டின் கை வழியே கையை விடாமல் நடந்துவந்த மெலானியாவின் கையைப்பற்ற நினைத்து ஏமாந்தார் ட்ரம்ப்.

இது பெரிய விஷயம் இல்லைதான். ஆனால், மனைவி மெலானியாவின் கையைப் பிடிக்க எண்ணி ட்ரம்ப் ஏமாறுவது இது முதன்முறையல்ல. இதற்கு முன்னர் பல உள்நாட்டு, வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களின்போதும் ட்ரம்ப் இதுபோல் மெலானியாவால் பலமுறைத் தவிர்க்கப்பட்டார். இதனால், ட்ரம்ப் - மெலானியா ஜோடி பலமுறை சர்வதேச நெட்டிசன்களால் விமர்சிக்கப்பட்டாலும், ட்ரம்ப் ஏமாறுவது தொடர் கதையாகவே உள்ளது.

 

 

 

More News >>