`திரும்பவும் ஒரு அட்டாக் நடக்கலாம் - மத்திய அரசை எச்சரிக்கும் உளவு அமைப்புகள்

இந்தியாவில் புல்வாமா போன்று மீண்டும் ஒரு தாக்குதல் நடைபெறலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த 21-ந் தேதி ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலில் 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் தொடர்பாக இதுவரை 106 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. தாக்குதலுக்கு ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றுள்ள நிலையில் இலங்கை வாழும் இஸ்லாமியமார்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் புல்வாமா தாக்குதல் நடந்த சில மாதங்களிலேயே இந்த தாக்குதலால் நமது நாட்டிலும் பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் மீண்டும் ஒரு தாக்குதல் நடத்தப்படலாம் எனத் தகவ்கள் கிடைத்துள்ளன.

இதற்காக ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் ஐஎஸ் மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் சந்தித்து ஆலோசனை நடத்தியதாகவும் ந்த சந்திப்பை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ ஏற்பாடு செய்ததாகவும், சமீபத்தில் நடந்த புல்வாமா தாக்குதலைப் போல, மற்றுமொரு தாக்குதலை காஷ்மீரில் அரங்கேற்ற, இந்த அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாகவும் இந்திய உளவுத்துறை அமைப்புகள் தெரிவித்துள்ளன. இந்த எச்சரிக்கையை தொடர்ந்து தமிழகம் உள்ளிட்ட இந்திய மாநிலங்களில் குறிப்பாக காஷ்மீர் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை குண்டுவெடிப்பு தீவிரவாதி இந்தியாவுக்கு 2 முறை வந்துள்ளான்! உளவுத் துறை தகவல்!
More News >>