குடும்பத்துடன் முதன்முறையாக வாக்களித்த சச்சின் டெண்டுல்கர்!
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று குடும்பத்துடன் சென்று வாக்களித்தார். சச்சின் டெண்டுல்கரின் குழந்தைகள் தற்போது 18வயதை கடந்து விட்ட நிலையில், முதன்முறையாக தனது குடும்பத்துடன் சச்சின் வாக்களித்துள்ளார்.
4ம் கட்ட மக்களவைத் தேர்தல் இன்று நடைபெற்றது. இதில், மகாராஷ்ட்ரா மாநிலத்தில் வாக்குப்பதிவுகள் நடைபெற்றன. மும்பையில் இன்று தேர்தல் நடைபெற்றதால், பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் தங்கள் வாக்கினை செலுத்தி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் அணியின் கேப்டனும் கிரிக்கெட் உலகில் கடவுள் என அன்போடு அழைக்கப்படும் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் இன்று மும்பையில் தனது வாக்கினை பதிவு செய்தார். மேலும், தனது மனைவி அஞ்சலி மகன் அர்ஜுன் மற்றும் மகள் சாராவுடன் வாக்குச்சாவடிக்கு வந்த சச்சின் தனது வாக்கினை பதிவு செய்தார். அர்ஜுன் மற்றும் சாரா முதன்முதலாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர்.
நாட்டின் நன்மைக்காக அனைவரும் வாக்களிக்க வேண்டும் என சச்சின் டெண்டுல்கர் கேட்டுக் கொண்டார்.
சென்னை மெட்ரோ ரயில்வே பணியாளர்கள் திடீர் போராட்டம்