சென்னை மெட்ரோ ரயில்வே பணியாளர்கள் திடீர் போராட்டம்
8 ஊழியர்களை நீக்கியதை கண்டித்து சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மெட்ரோ அலுவலகத்தில் தற்தாலிக ஊழியர்கள், நிரந்தர ஊழியர்கள் என 2 தரப்பினரும் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் அதிக சம்பளத்தில் தற்காலிக ஊழியர்களை மெட்ரோ அதிகாரிகள் நியமனம் செய்வதாக அரசு ஊழியர்கள் குற்றம் சாட்டினர். இதன் எதிரொலியாக குறை கூறியவர்களில் 8 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
ரயில்வே ஊழியர்கள் சங்கம் தொடங்கியதால் அந்த 8 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர் என அதிகாரிகள் காரணத்தை கூறினர். ஆனால் ஊழியர்கள் பணியிடை நீக்கத்தை கண்டித்து கோயம்பேடு மெட்ரோ தலைமை அலுவலகத்தில் ஊழியர்கள் உள்ளியிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊழியர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர, போராட்டத்தில் ஈடுபடுவர்களிடம் மெட்ரோ நிர்வாகம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
ப்ளீஸ்.. கைப்பை எல்லாம் கொண்டு வர வேண்டாம்! தேவலாயத்துக்கு வருபவர்களுக்கு வேண்டுகோள்!