சுப்பிரமணியசாமி கருத்தை கிண்டலாகnbspதான் பார்ப்பார்கள் - வைகைச்செல்வன்!
சுப்பிரமணியசாமி கருத்துகளை கிண்டலாகவும், நையாண்டியாகவும், நகைச்சுவையாக தான் பார்ப்பார்கள் என்று அதிமுக அமைச்சர் வைகைச்செல்வன் கூறியுள்ளார்.
கோவில்பட்டி காந்தி மைதானம் அருகே நடைபெற்ற திருவள்ளுவர் மன்றத்தின் 46ம் ஆண்டு நிறைவு விழாவில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ மற்றும் அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
முன்னதாக சுப்பிரமணிய சாமி, “காவிரி நீர் கிடைக்காது. சும்மா நாடகம் ஆடுகிறார்கள். கடல் நீரை சுத்திகரித்து குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு கொடுக்கலாம். இது முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருக்கு தெரியாதா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இது குறித்து செய்தியாளர்களின்ம் கேள்விக்கு பதிலளித்த அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன், “சுப்பிரமணியசாமி கருத்து எப்போதும் ஏற்புடையது கிடையாது, அவர் எப்போதும் முன்னுக்கு பின் முரணாக பேவது தான் அவரது பழக்கம், வழக்கம்.
ஆகையால் அவரது கருத்துகளை கிண்டலாகவும், நையாண்டியாகவும், நகைச்சுவையாக தான் பார்ப்பார்கள். அதே போன்று தான் இந்த கருத்தினையும், நகைச்சுவையாக பார்க்க வேண்டும். காவிரி நதி நீரை கேட்டு பெறுவதற்கு தமிழக முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் கர்நாடக முதல்வரை நேரிடையாக சந்தித்து பேசவுள்ளனர்.
நமக்கு கிடைக்கவேண்டிய நியாயம் கிடைத்து தீரும், விரைவில் டெல்டா பகுதி விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கும் அதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்து வருகிறது” என்று தெரிவித்தார்.