அரசியலில் இந்த ரூட்டை பிடிச்சாதான் நல்லது கூட பண்ண முடியும் பவர்பேக் என்ஜிகே ட்ரெய்லர் ரிலீஸ்!
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள என்ஜிகே படத்தின் ட்ரெய்லர் ரிலீசாகியுள்ளது.
செல்வராகவன் இயக்கத்தில் புதுப்பேட்டை படத்தில் ரவுடிசம் மற்றும் அரசியல் கலந்து சொல்லப்பட்டிருக்கும். சூர்யாவின் என்ஜிகே படத்தில் முழுக்க முழுக்க அரசியல் நெடி தெறிக்கிறது.
சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் செல்வராகவன் இயக்கியுள்ள நந்த கோபால குமரன் எனும் என்ஜிகே படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
சென்னையில், சூர்யா, யுவன்சங்கர் ராஜா, செல்வராகவன் கலந்து கொண்டு படத்தின் ஆடியோ லாஞ்சை தற்போது பிரம்மாண்டமாக நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது யூடியூப் தளத்தில் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இளைஞர்கள் அரசியலை விட்டு ஓடக் கூடாது என்றும், நேர்மையான முறையில் அரசியலில் முன்னேற முடியாது என்றும், நல்லது பண்ண வேண்டுமானலும், அரசியலில் அரசியல் பண்ணி முன்னேறிய பின்னரே அதை செய்ய முடியும் என்றும் பக்காவாக ட்ரெய்லரில் பின்னி எடுத்துள்ளார் செல்வராகவன்.
ஆட்டோக்களில் ஜி.பி.எஸ். கருவியுடன் கட்டண மீட்டர்- தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்