சத்து நிறைந்த குதிரைவாலி கார தோசை ரெசிபி

உடலுக்கு மிகவும் சத்து தரும் குதிரைவாலி கார தோசை எப்படி செய்றதுன்னு இப்போ பார்ப்போம்..

தேவையான பொருட்கள்:

குதிரைவாலி - 200 கிராம்

துவரம் பருப்பு - 50 கிராம்

காய்ந்த மிளகாய் - 2

சீரகம் - அரை டீஸ்பூன்

சின்ன வெங்காயம் - 4

கறிவேப்பிலை - சிறிதளவு

பூண்டு - 2 பல்

எண்ணெய்

உப்பு

செய்முறை:

முதலில், குதிரைவாலி, துவரம்பருப்பை ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

அத்துடன் குதிரைவாலி, துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

இந்த மாவுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.

மாவை தோசைக்கல்லில் தோசைகளாக ஊற்றி எண்ணெய் விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

அவ்வளவுதாங்க சத்தான குதிரைவாலி கார தோசை ரெடி..!

More News >>