அய்யனாருடன் கம்பீரமாக நிற்கும் தனுஷ்.. அசுர வேட்டை விரைவில்

அசுரன் குறித்து நடிகர் தனுஷ் புதிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.  

தனுஷ் - வெற்றிமாறன் ஹிட் கூட்டணி நான்காவது முறையாக இணைந்திருக்கும் படம் அசுரன். கொடி படத்தை தொடர்ந்து இப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். பூமணியின் வெக்கை எனும் நாவலை தழுவி இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

இப்படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இப்படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் தன் ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து அப்டேட் கொடுத்து வருகிறார்.  ஆனால் இம்முறை நடிகர் தனுஷே புதிய போஸ்டருடன் அப்டேட் ஒன்றை கொடுத்திருக்கிறார். அந்த போஸ்டரில் `அசுர வேட்டை விரைவில்.. இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் விரைவில் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. போஸ்டரில் ரத்த கரையுடன் வெறித்தனமாக நிற்கும் தனுஷின் பின்னணியில் அய்யனார் கம்பீரமாக நிற்கிறார்.

 

More News >>