அடடே.. சாமைப் பொங்கல் ரெசிபி
சத்தான சாமைப் பொங்கல் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:பாசிப் பருப்பு - 50 கிராம்
சாமை அரிசி - 200 கிராம்
மிளகு - 10
சீரகம் - ஒரு டீஸ்பூன்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
தோல் சீவி பொடியாக நறுக்கிய - இஞ்சி ஒரு டீஸ்பூன்
வறுத்த முந்திரிபருப்பு - 10
கருவேப்பிலை
பெருங்காயத்தூள் - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
முதலில், சாமை அரிசியுடன் பாசிப்பருப்பு சேர்த்து லேசாக வறுக்கவும்.
இவற்றுடன் ஒரு பங்கு அரிசிக்கு நான்கு பங்கு அளவில் தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரில் 5 விசில் வரும் வரை வேகவிட்டு இறக்கவும்.
வாணலியில் சிறிதளவு நெய்யை சூடாக்கி அதில் மிளகு, சீரகத்தை சேர்த்து வறுக்கவும். பிறகு இஞ்சியையும் சேர்த்து வறுக்கவும்.
இதை வேகவைத்த பொங்கல் கலவையில் சேர்க்கவும். இதனுடன் கறிவேப்பிலை, வறுத்த முந்திரி, பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மீதமுள்ள நெய் விட்டு கலந்து சுட சுட பரிமாறவும்.
அவ்ளோதாங்க... சுவையான சாமைப் பொங்கல் ரெசிபி ரெடி..!