இளம் இந்திய சிற்பிகள் பட்டியல்: வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு கவுரவம்
பிரபல தொழில், வர்த்தக இதழான ஃபோர்ப்ஸ் இதழ் ஒவ்வொரு ஆண்டும் துறைவாரியாக டாப்-30 இளைஞர்களைத் தேர்வு செய்து கவுரவிப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கானப் பட்டியலில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தேர்வு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
இந்தியக் கிரிக்கெட் அணியில் இடதுகை வேகப்பந்து வீச்சாளராக அறியப்படுபவர் ஜஸ்பிரீத் பும்ரா. இந்திய அணியில் இடக்கை வேகப்பந்து வீச்சாளருக்கான இடம் யாராலும் இதுவரையில் யாராலும் நிரந்திரமாக நிரப்பப்படவில்லை. டி20, ஒரு நாள் தொடர் என அசத்தல் பவுலராக வலம் வருகிறார்.
24 வயதாகும் பும்ரா முதன்முதலாக கடந்த 2013-ம் ஆண்டு உள்ளூர் போட்டியில் குஜராத் அணியிலும் ஐபிஎல் போட்டியில் மும்பை அணியிலும் விளையாடும் வாய்ப்புப் பெற்று அறிமுகமானார்.
2016-ம் ஆண்டிலிருந்து இந்திய அணிக்காக சர்வதேசப் போத்திகளில் விளையாடி வரும் பும்ரா, சமீபத்தில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் தன்னுடைய அசத்தலான பந்துவீச்சின் மூலம் இந்திய அணிக்கு சிறப்பான வெற்றியைப் பதிவு செய்தார்.
தற்போது ஃபோர்ப்ஸ் இதழில் சிறந்த இந்திய இளைஞர்களின் டாப்- 30 பட்டியலில் 16-ம் இடம் பிடித்து அசத்தியுள்ளார். இந்த அங்கீகாரம் பும்ராவின் வளர்ச்சிக்கு மேலும் உத்வேகத்தை அளிப்பதாகவே அமைந்துள்ளது.