எதிர்பார்க்கவேயில்ல.. விருது மேடையில் பொய் சொன்ன செம்பா

விஜய் டிவியின் விஜய்  சின்னதிரை விருதுகள் நிகழ்ச்சி நேற்று ஒளிபரப்பானது. வழக்கம் போல் இந்த நிகழ்வுக்கான விளம்பரங்கள் கடந்த ஒரு வாரமாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டே இருந்தது. குறிப்பாக ஆல்யா –சஞ்ஜீவுக்கு மேடையிலேயே நிச்சயதார்த்தம் நடந்த புரோமோதான் ஓயாமல் டிவியில் ஓடியது. அப்படி என்னதான் நடந்தது என்பதை பார்ப்போம்.

விஜய் சின்ன திரை விருது விழாவில், சிறந்த நடிகைக்கான  விருது  ராஜா ராணி சீரியலின் செம்பா, ஆல்யா மானஸாவுக்கு கிடைத்தது. விருது வாங்கி கொண்டு நாலு வார்த்தை பேசிவிட்டு போகவில்லை. தொகுப்பாளினி டிடி  சஞ்சீவை மேடைக்கு அழைத்தார். மேடைக்கு வந்த சஞ்சீவ், மோதிரத்தை கையில் எடுத்து, ஆல்யா முன் மண்டியிட்டு வில் யூ மேரி மீ என்று கேட்டார்.  இன்ப அதிர்ச்சியில் உறைந்து போன மாதிரி ரியாக்‌ஷன் கொடுத்த ஆல்யா, எஸ் என்று பதில் சொன்னார். உடனே மாலையும் மாற்றி கொண்டனர். மேடையிலேயே இருவரின் நிச்சயதார்த்தம் முடிந்தது. ஆல்யா இது அனைத்துமே சர்ப்பரைஸாக இருந்தது என்று சொன்னார். இதை எதிர்பார்க்கவே இல்லை என்று அப்பட்டமாக பொய் சொன்னார். ஆனால் அனைத்துமே ஸ்கிரிப்டட் என்று ரசிகர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆல்யா திருமண உடை போன்று பிரமாண்ட ஆடை அணிந்து வந்ததே இதற்கு சாட்சி. எப்படியோ டிஆர்பி வந்தால் போதும்!

 

 

More News >>