சுவையான மசாலா வேர்க்கடலை சட்னி ரெசிபி

இட்லி தோசைக்கு ஏற்ற சூப்பரான சைட் மசாலா வேர்க்கடலை சட்னி எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

மசாலா வேர்க்கடலை - ஒரு கப்

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

பூண்டு - 15 பற்கள்

தேங்காய் துருவல் - 4 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கடுகு - ஒரு டீஸ்பூன்

பெருங்காயம் - ஒரு டீஸ்பூன்

செய்முறை:

முதலில் வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு அது காய்ந்ததும் உரித்த பூண்டு பற்களைப் போட்டு வதக்கவும்.

மிக்ஸி ஜாரில் மசாலா வேர்க்கடலையை போட்டு இரண்டு சுற்று சுற்றி அத்துடன் வதக்கிய பூண்டு தேங்காய்த் துருவல் உப்பு சேர்த்து மறுபடியும் ஒரு சுற்று சுற்றி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக நைஸாக அரைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு பெருங்காயம் சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்து கிளறி பரிமாறினால் சுவையான மசாலா வேர்க்கடலை சட்னி ரெடி..!

More News >>