சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 2 குழந்தைகளின் தந்தை
தஞ்சையில் 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 2 குழந்தைகளின் தந்தையை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே சில்லத்தூர் வெட்டிகாட்டை சேர்ந்தவர் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி. கடந்தாண்டு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பட்டுக்கோட்டை மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
அதன்பேரில் போலீசார் ஒரு வாலிபரை கைது செய்தனர். ஆனால் தன் மீதான குற்றஞ்சாட்டை அந்த வாலிபர் மறுத்தார். இதனையடுத்து பின்னர் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றனர். அப்போது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த சிறுமி, ஒரு குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தை யாருக்கு சொந்தம் என்பதை அறிவதற்காக சிறுமிக்கு மரபணு சோதனை செய்யப்பட்டது.
அப்போது குற்றம் சாட்டப்பட்ட வாலிபருக்கு பாலியல் பலாத்கார சம்பவத்தில் தொடர்பில்லை என தெரியவந்தது. இதையடுத்து மீண்டும் சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமி, தன்னை பாலியல் பலாத்காரம் செய்தவர் பாச்சூரை சேர்ந்த பொன்னையன் மகன் பால்ராஜ் (வயது 27) என தெரிவித்தார்.
இது தொடர்பாக விசாரித்து, பட்டுக்கோட்டை மகளிர் போலீசார் பால்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்தனர். கைதான பால்ராஜூக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் அந்த சிறுமி தற்போது கூறியிருப்பது உண்மைதானா என்பது பால்ராஜூக்கு மரபணு சோதனை நடத்திய பிறகே தெரியவரும் என தகவல் வெளியாகியுள்ளது.
பாலியல் பலாத்காரம்... கரண்ட் ஷாக்.... 12 வயது சிறுமியை கொடூரமாக கொன்ற வாலிபர்