வேகம் எடுக்கும் பொள்ளாச்சி பாலியல் வழக்கு: ஆவணங்கள், 40 சாட்சிகளின் வாக்குமூலம் சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பு
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், 40 சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தையே அதிர வைத்த பொள்ளாச்சி பாலியல் வழக்கை முதலில் சிபிசிஐடி விசாரித்து வந்தது. அந்த விவகாரத்தில் பல பெண்கள் பாதிக்கப்பட்ட தகவல் அந்த வழக்கை தோண்ட தோண்ட வெளியே தெரிய தொடங்கியுள்ளது.
வழக்கின் தீவிரத்தை உணர்ந்த தமிழக அரசு பொள்ளாச்சி பாலியல் வழக்கை, தமிழக அரசு சிபிஐக்கு மாற்றியது. இதைத் தொடர்ந்து இரு வழக்குகளை சிபிஐ பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது.
இந்தநிலையில், வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் சிபிஐயிடம் ஒப்படைத்து விட்டதாக சிபிசிஐடி கூறியது. மேலும், 40 சாட்சிகளிடம் பெற்ற வாக்குமூலங்கள், கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்கள், கைப்பற்றப்பட்ட செல்போன் வீடியோக்களின் தடயவியல் ஆய்வு முடிவுகள் மற்றும் இதர ஆவணங்கள் அனைத்தும் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பொள்ளாச்சி பாலியல் வழக்கை சி.பி.ஐ. கையில் எடுத்துள்ளதால் இனி இந்த வழக்கு விசாரணை வேகமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடங்கியது பணப் பட்டுவாடா...! அதிமுகவுக்கு கடினம்..! திமுகவுக்கு..? –சூலூர் தொகுதி