சகோதரிகளை ஏமாற்றி கர்ப்பமாக்கிய காதல் மன்னன் மீது புகார்
நாமக்கல் மாவட்டத்தில், தன்னை ஏமாற்றி கர்ப்பமாக்கியதோடு, தனது பெரியம்மாள் மகளையும் ஏமாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளதாக இளைஞன் மீது இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் இளவரசி. அவரும் அவரது உறவினரின் மகனுமான சேலம் கொளத்தூரைச் சேர்ந்த கார்த்திக்கும் காதலித்ததாகக் கூறப்படுகிறது.
முன்னதாக இளவரசியின் சகோதரியை கார்த்திக் காதலிப்பது போல் நாடகமாடியதாக சொல்லப்படுகிறது. அதே சமயத்தில் இளவரசியை ஏமாற்றி கார்த்திக் கர்ப்பமாக்கி விட்டதாகவும், இதை அடுத்து தலைமறைவாகி விட்டதாகவும் பெண் வீட்டார் தரப்பில் போலீசில் புகார் கூறப்பட்டது.
இதனையடுத்து கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி காவல்நிலையத்தில் வைத்து கார்த்திக்குக்கும், இளவரசிக்கும் போலீசார் திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் தன்னை மருமகளாக்கிக் கொள்ள கார்த்திக் வீட்டார் மறுத்ததாகவும், தொடர்ந்து சித்ரவதை செய்ததாகவும் இளவரசி புகார் கூறியுள்ளார். திருமணமான மறுநாளே கணவர் எங்கேயோ புறப்பட்டுச் சென்றதாகவும் தற்போது வரை வீட்டிற்கு வரவில்லை என்று இளவரசி குற்றம்சாட்டியுள்ளார்.
தற்போது தனது பெரியம்மாள் மகளை கார்த்திக் ஏமாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளதாக அந்தப் பெண் குற்றம்சாட்டியுள்ளார். திருப்பூரில் ஏற்கெனவே ஒரு பெண்ணை, கார்த்திக் ஏமாற்றி இருப்பது தற்போது தெரிய வந்திருப்பதாகவும் இளவரசி கூறியுள்ளார்.
கார்த்திக்கைக் கண்டுபிடித்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இளவரசியின் குடும்பத்தினர், ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
கலைக்கப்பட்டது தயாரிப்பாளர் சங்கம்- விஷாலுக்கு தமிழக அரசு கொடுத்த பேரதிர்ச்சி