தங்க கடத்தலின் தலைநகரமா சென்னை? மீண்டும் கடத்தல் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் நேற்று 6 பயணிகளிடம் மொத்தம் ரூ.72 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தங்க கடத்தலின் தலைநகரமாக சென்னை மாறி வருகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் கடந்த சில தினங்களாக பயணிகளிடமிருந்து கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
சென்னை விமான நிலையத்தில் நேற்றுமுன்தினம் மட்டும் ரூ.1.76 கோடி மதிப்புள்ள 5.33 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. குறிப்பாக, 14 பெண் பயணிகளிடம் இருந்து ரூ.1.2கோடி மதிப்புள்ள 3.64 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில், இன்று வெளிநாடுகளில் இருந்து தங்க கட்டிகள் கடத்தி வந்த 6 பேர் சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டனர்.
கொழும்புவில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் வந்த பயணிகள் 4 பேர் மற்றும் துபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானத்தில் வந்த 2 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து சுங்கத்துறையினர் விசாரித்தனர்.அப்போது அவர்கள் 2 கிலோ எடையிலான 24 காரட் தங்க கட்டிகளை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ரூ.72 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவர்களை விசாரித்து வருகின்றனர்.
சும்மா நின்ற ஏர்இந்தியா விமானம் திடீரென தீ்ப்பிடித்தது: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய போயிங் விமானம்