பனிமனிதன் உண்மைதானா..? -இமயமலையில் கால் தடம் கண்டுபிடிப்பு
பனிமனிதன் என்று அறியப்படும் ஒன்றின், வினோத தடத்தைப் பார்த்ததாக இந்திய ராணுவம் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
ஒரு தனிப்பட்ட உயிரினத்தில் இருந்து பல பிரிவுகள் உருவாக சாத்தியம் உண்டு. இதன் அடிப்படையில் தான் குரங்கை அடிப்படையாகக் கொண்டு மனிதன் உட்பட சில விலங்குகள் தோன்றி இருந்தன. அவ்வாறு பரிணாம வளர்ச்சி படியில் மரபணுக்களில் ஏற்படும் சீரான மியுட்டேஷன் மாற்றத்தால் புதுவகை உயிரினங்கள் உருவாகி இருக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது.
உதாரணமாக, தற்போது சில வகை நோய்களை தடுப்பதற்காக எதிர் தன்மை உடைய பாக்டீரியாக்கள், வைரஸ்கள் போன்றன ஆய்வு கூடங்களையே மரபணு மாற்றத்தின் மூலம் உருவாக்கப்படுகின்றன. பரிணாம கொள்கையின் படி பரிணாம உயிரினங்கள் உருவாகிறது என்றால், அது தற்போது உள்ள சுழலுக்கு தகுந்தவாறு செயல்படக் கூடிய உயிரினங்களாகவே இருக்க வேண்டும்.
ஆனால், பனிமனிதன் என சொல்லப்படும் இவைகள் தற்சமய சுழலுக்கு ஏற்ற இணையாக்கும் அடைந்த உயிரினங்கள் இல்லை என்று சொல்லப்படுகிறது. அதுவும், மனிதனுடன் ஒத்துப்போகும் உடலமைப்பு உள்ள விலங்கினம் என்ற வகையில் பார்த்தல், சுழலுக்கு ஒத்துவராத ஒரு விலங்காகவே பனிமனிதன் பார்க்கப்படுகிறது. அதனால், பனிமனிதன் தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பனிமனிதன் என்று அறியப்படும் வினோத ஒன்றின் தடத்தைப் பார்த்ததாக இந்திய ராணுவம் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், இமாலய மலைத் தொடரில் உள்ள மாகுல் பேஸ் கேம்பில் 32x15 அங்குலத்தில் மர்மமான அடிச்சுவடுகளைக் கண்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. பனிமனிதன் தொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், தற்போது இந்திய ராணுவம் கொடுத்த தகவல் மேலும் பனிமனிதன் குறித்த சுவாரசியத்தை அதிகரித்து உள்ளது.
பேஷன் ஷோவில் மயங்கி விழுந்த பிரபல மாடல் அழகி மரணம்