ரூ.50 லஞ்சத்துக்கு ஆசைப்பட்டதால் ஆயுதபடைக்கு தூக்கி அடிக்கப்பட்ட எஸ்.ஐ. உள்பட 3 காவலர்கள்
பெரம்பலுார் அருகே, லாரி டிரைவரிடம், 50 ரூபாய் லஞ்சம் கேட்டு, வாக்குவாதம் செய்த நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு, எஸ்.ஐ., உட்பட 3 பேர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.
பெரம்பலுார் மாவட்டம், நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசார் சிலர், வேப்பந்தட்டை சார் பதிவாளர் அலுவலகம் அருகே சோதனை என்ற பெயரில் அந்த பகுதிகளில் வரும் வாகனங்களை நிறுத்தி லஞ்சம் வாங்கி கொண்டு இருந்ததாக தெரிகிறது. அப்போது அந்த பாதையில் வந்த லாரியை மடக்கி டிரைவரிடம், 50 ரூபாய் லஞ்சம் கேட்டனர்.
ஆனால் தன்னிடம் ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருப்பதால் 50 ரூபாய் தர முடியாது என லாரி டிரைவர் தெரிவித்தார். இதனால் போலீசாருக்கும், லாரி டிரைவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வீடியோ, 'வாட்ஸ் ஆப்'பில் பரவியது.
அந்த வீடியோ பெரம்பலுார், எஸ்.பி., திஷா மிட்டல் கவனத்துக்கு சென்றது. இதனையடுத்து எஸ்.பி. திஷா மிடடல் உத்தரவுப்படி நடந்த விசாரணையில், எஸ்.ஐ., ஜெயராஜ், ஏட்டு அம்பேத்கர் மற்றும் டிரைவர் முத்தையா ஆகியோர், லாரி டிரைவரிடம் லஞ்சம் கேட்டது உண்மை என தெரிய வந்தது. இதனையடுத்து மூவரையும் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து, எஸ்.பி., திஷாமிட்டல் நேற்று உத்தரவிட்டார்.
அமெரிக்காவில் குக்கர் குண்டு வைக்க சதி? முன்னாள் ராணுவ வீரர் கைது!