கபாலி பட நடிகையின் ஒத்த ரோசா மொமண்ட்!
சமூக வலைதளத்தில் நடிகை தன்ஷிகா தனது ரெட்ரோ லுக் புகைப்படத்தை வெளியிட்டு வைரலாக்கியுள்ளார்.
கபாலி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளாக நடித்தவர் நடிகை சாய் தன்ஷிகா. கபாலி படத்திற்கு பிறகு நல்ல எதிர்காலம் கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த தன்ஷிகாவுக்கு ஏகப்பட்ட படங்கள் கமீட் ஆகின. ஆனால், எதுவும் எதிர்பார்த்த அளவுக்கு தன்ஷிகாவின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இல்லை.
சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான உச்சகட்டம் படம் கூட பட தலைப்பின் காரணமாக பலரும் அதை ஆபாச படம் ரேஞ்சுக்கு எண்ணிக் கொண்டு படத்தை பார்க்கவே இல்லை.
இந்நிலையில், தன்ஷிகா தனது ட்விட்டர் பக்கத்தில் புதிதாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 80களில் வரும் நாயகியின் லுக்குடன் உள்ள தன்ஷிகா ஒத்த ரோசா மொமண்ட் போல தலையில் ஒரே ஒரு பிளாஸ்டிக் பூவை வைத்துக் கொண்டு செம க்யூட்டாக இருக்கிறார்.
தன்ஷிகாவின் திறமைக்கு ஏற்ப விரைவில் நல்ல வெற்றி படம் கிடைக்க வாழ்த்துகள்!
தர்பார் ஷூட்டிங் ஸ்டில்ஸ் லீக்; வேற லெவல் எனர்ஜியுடன் சூப்பர்ஸ்டார்!