கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்ட போலீஸ் குடும்பத்தினர்
சென்னையில் காவலர் குடியிருப்புகளில் பல வருடங்களாக வசித்து வரும் தங்களை வேறு குடியிருப்புகளுக்கு மாற்றுவதாகக் கூறி, காவலர் குடும்பத்தினர் காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை புதுப்பேட்டையில் காவலர் குடியிருப்புகள் உள்ளது. இந்த காவலர் குடியிருப்பில் பத்து வருடங்களாக போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணிபுரியும் காவலர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
அந்த குடியிருப்புகள் கட்டி 30 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என்பதால் தற்போது அவை சிதிலமடைந்திருக்கிறது. அங்கு வசித்து வரும் சுமார் 120 காவலர் குடும்பங்களுக்கு அருகில் கட்டப்பட்டு வந்த புதிய குடியிருப்பில் வீடு ஒதுக்கப்படும் என கூறிய நிலையில், தற்போது தொலைவில் குடியிருப்புகளுக்கு இடமாற்றம் வழங்குவதாக கூறப்படுகிறது.
அதே வேளையில் சிதிலமடைந்த குடியிருப்புகளை இடிக்கவுள்ளதால் உடனடியாக காலி செய்ய வலியுறுத்தி வருவதால் அவர்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் நேற்று சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு காவல் குடும்பத்தினர் சிலர் திரண்டனர். மேலும், காவல் ஆணையர் தலையிட்டு உரிய தீர்வை பெற்று தரவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
திரிணாமுல் எம்எல்ஏக்கள் குறித்த சர்ச்சை ..! மோடிக்கு 72 ஆண்டு தடை...! அகிலேஷ் காட்டம்