வெளிமாநில நீதிபதி முன்னிலையில் மதுரை தொகுதி வாக்கு எண்ணிக்கை - தேர்தல் ஆணையம் தகவல்

வெளிமாநில நீதிபதியை பார்வையாளராக நியமித்து மதுரை மக்களவைத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது.

மதுரை மருத்துவக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் பெண் தாசில்தார் சம்பூர்ணம் அத்துமீறி நுழைந்த விவகாரம் பெரும் சர்ச்சையாகி விட்டது.இந்த விவகாரத்தில் போதிய உண்மைகள் வெளிச்சத்திற்கு வராத நிலையில், தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவுகளை பிறப்பித்து தேர்தல் ஆணையத்துக்கு கடும் உத்தரவுகளையும் பிறப்பித்து வருகிறது.

மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் தொடர்ந்த வழக்கில், தேர்தல் ஆணையத்தை கடுமையாக சாடிய உயர் நீதிமன்ற நீதிபதிகள், மதுரை மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகள், பாதுகாப்பில் இருந்த காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்யவும், ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து, மதுரையில் வாக்கு எண்ணிக்கைக்கு தடை கோரியும், மறு வாக்குப்பதிவு நடத்தவும் உத்தரவிடக் கோரி, சுயேட்சை வேட்பாளர் பசும்பொன் பாண்டியன் தொடர்ந்த வழக்கு விசாரணை, உயர் நீதிமன்ற நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் அமர்வு முன் இன்று நடைபெற்றது.அப்போது தலைமைத் தேர்தல் ஆணையம் தரப்பில், மதுரை தொகுதி வாக்கு எண்ணிக்கை வெளி மாநில நீதிபதியின் மேற்பார்வையில் நடத்தப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.

More News >>