சத்து நிறைந்த ஸ்வீட் கார்ன் மாதுளை சாலட் ரெசிபி
உடலுக்கு நன்மை தரும் ஸ்வீட் கார்ன் மாதுளை சாலட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்...
தேவையான பொருட்கள்:
ஸ்வீட் கார்ன் - ஒன்று
மாதுளை - ஒரு கப்
தேங்காய் துருவல் - அரை கப்
பச்சை மிளகாய் - ஒன்று
கடுகு - அரை டீஸ்பூன்
கொத்தமல்லி இலை - சிறிதளவு
தேங்காய் எண்ணெய் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஸ்வீட் கார்ன் கதிர்களை தனியாக எடுத்து ஆவியில் வேக வைத்து அதன் முத்துக்களை தனியாக எடுக்கவும்.
பிறகு பச்சை மிளகாயை நடுவில் இருக்கும் விதைகளை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஓர் அகலமான பவுலில் வேகவைத்த ஸ்வீட் கார்ன் முத்துக்கள், மாதுளை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும்.
அதை ஸ்வீட் கார்ன், மாதுளை கலவையோடு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். அவற்றுடன் உப்பு, தேங்காய் துருவல், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி நன்கு கலந்து கொள்ளவும்.
அவ்ளோதாங்க சுவையான ஸ்வீட் கார்ன் மாதுளை சாலட் ரெடி..!