சத்யம் சினிமாஸின் அடுத்த அவதாரம் என்ன தெரியுமா

பிரபல திரையரங்க நிறுவனமான சத்யம் சினிமாஸ் நிறுவனத்தின் அடுத்த கட்டம் என்ன தெரியுமா?

இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் தற்பொழுது படம் ஒன்றை நடித்துவருகிறார். ரஜினி முருகன், வருத்தபடாத வாலிபர் சங்கம், சீமராஜா என தொடர் வெற்றியை கொடுத்த பொன்ராமுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார் சசிகுமார் என்று தான் சொல்லவேண்டும். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துவருகிறது. படத்தில் முக்கிய கேரக்டரில் மூத்த நடிகரான ராஜ்கிரண் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கெனவே பொன்ராம் இயக்கத்தில் வெளியான ரஜினிமுருகன் படத்தில் ராஜ்கிரண் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் வேலைகள் பிஸியாக போய்வந்தாலும் யார் படத்தை தயாரிக்கிறார் என்பது நீண்ட நாட்களாகவே சஸ்பென்ஸாக இருந்தது. இறுதியாக தீர்வும் கிடைத்துள்ளது. பொன்ராம் - சசிகுமார் கூட்டணியில் உருவாகிவரும் படத்தை சத்யம் சினிமாஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது. சென்னையின் பிரபல திரையரங்கமானது சத்யம் சினிமாஸ். இந்த திரையரங்கை பிவிஆர் நிறுவனம் வாங்கிவிட்டது. ஆனாலும் நிர்வாகத்தை சத்யம் சினிமாஸ் நிறுவனமே கவனித்துவருகிறது. இனி திரையரங்குகளில் பணத்தைப் போடுவதை விட, திரைப்படங்களில் போட முடிவெடுத்திருக்கிறது சத்யம் குழுமம். தயாரிப்பு நிறுவனமாக களத்தில் இறங்கும் சத்யமின் முதல் படம் சசிகுமாருடையது என்பது குறிப்பிடத்தக்கது. சத்யம் நிறுவனம் எதில் கால்பதித்தாலும் ஹிட்டோ ஹிட் ரகம் தான். திரையுலகில் ஜொலிப்பார்களா என்பதை பார்க்கலாம்.

More News >>