தடைகளை தகர்த்து விருட்சமாக வளர்த்திருக்கும் அஜித்! பிறந்தநாள் வாழ்த்துக்கள் தல...
நல்ல மனதிற்கும் தன் அடக்கத்திற்கும் பெயர்பெற்றவர் நடிகர் அஜித் குமார். திரை உலகில் இன்று முன்னணி நடிகர். ஆனால், இந்த உயரத்தை அடைய அவர் யார் உதவியும் இல்லாமலும் முட்டி மோதி இன்று விருட்சமாக வளர்ந்திருக்கிறார் நடிகர் அஜித்.
தமிழ் திரை உலகில் தலையாக வரும் அஜித் குமார் முதலில் தலைகாட்டியது தெலுங்கில்தான். 1992-ம் ஆண்டு வெளியான பிரேம புத்தகம் என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். இந்தப்படத்தில், சிறந்த புதுமுக நாயகன் விருது அஜித்துக்குக் கிடைத்தது.
இதன் பின்னரே, 1993-ம் ஆண்டு அமராவதி படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இந்தப்படத்தைத் தொடர்ந்து, பாசமலர்கள், பாவித்ரா, ராஜாவின் பார்வையிலேயே எனப் பல படங்களில் அஜித் நடித்திருந்தாலும் அவை, சரியான படிக்கட்டுகளை அஜித்துக்கு அமைத்துத் தரவில்லை. 1995-ம் ஆண்டு வெளியான ஆசை தமிழ் திரை உலகில் அஜித்தின் இடத்தை உறுதி செய்தது. இதற்கிடையே, மோட்டார் பந்தயம் ஒன்றில் காயம் பட்டதால் சிறிது காலம் நடிப்பில் இருந்து அஜித் சற்று விலகி இருந்தார்.
1998-ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான காதல் மன்னன் வசூலை அள்ளியது. இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தன. காதல் மனனம் படத்திற்கு பிறகு மூன்று ஆண்டுகள் சறுக்கல்களைத்தான் அஜித் சந்திக்க நேர்ந்தது. 2௦௦3 முதல் 2005 வரை ஐந்து படங்கள் வெளியானாலும் ரசிகர்களின் வரவேற்பைப் பெறவில்லை.
அதன் பிறகு, சரண் இயக்கத்தில் வெளியான அட்டகாசம் திரைப்படம் அஜித்துக்கு ரீ என்ட்ரி போல் அமைந்தது. அஜித்தின் நடிப்பும், மிரட்டும் சட்டை காட்சிகளும் அவரை அதிரடி நாயகன் வரிசையில் நிறுத்தியது. 2010-ம் ஆண்டு வெளியான அசல் விமர்சனம் ரீதியாக வரவேற்பைப் பெற்றாலும், வசூல் ரீதியாக சற்று தொய்வடைந்தது. ரஜினியின் பில்லா படத்தைத் தழுவி 2007-ம் ஆண்டில் அஜித், நயன்தாரா நடிப்பில் வெளியான பில்லா திரைப்படம் திரையரங்குகளைத் தோட்டா சத்தங்களால் அதிர வைத்ததுடன், தமிழ் திரை உலகில் அஜித்துக்குத் தனி சிம்மாசனத்தை அமைத்துக் கொடுத்தது.
2011-ம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான அஜித்தின் மங்காத்தா வெளியான இடங்களில் எல்லாம் வாகை சூடியது. அஜித்தின் அக்ஷன் கட்சிகளுக்குக் கன கச்சிதமாகப் பொருந்திய யுவனின் இசை ரசிகர்களை கொண்டாட வைத்தது. 2011-ம் ஆண்டு முதல் வரிசைக் கட்டி வெளியான ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், வேதாளம் உள்ளிட்ட திரைப்படங்கள் அஜித்தின் திரை உலக வாழ்க்கையை உச்சக் கட்டத்திற்கு கொண்டு சென்றது. அண்மையில் அஜித் நடிப்பில் வெளியான படம் விஸ்வாசம்.தந்தைக்கும் மகளுக்கும் இடையே உள்ள பாசத்தைக் கதைக் கருவாகக் கொண்ட திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் கிடைத்த கைதட்டல்கள் இன்றும் திரையரங்குகளில் ஒழித்துக் கொண்டிருக்கிறது.
பின் அடைவுகளை எல்லாம் பொறுமையாக எதிர்கொண்டு போராடி முன்னணிக்கு வந்திருக்கும் அஜித் குமாரின் வாழ்க்கை சாதிக்கத் துடிக்கும் இளம் கலைஞர்களுக்கு ஒரு உதாரணம் என்றே சொல்லலாம்.
துணிச்சலாக இருங்கள் பெண்களே..இதெல்லாம் நடக்கும் - நீண்ட நாட்களுக்கு பிறகு வெளிச்சத்துக்கு வந்த சமீரா ரெட்டி