சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி காலமானார்

சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி சுபாஷன் ரெட்டி உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். கடந்த மாதம் சுபாஷன் ரெட்டிக்கு திடீரென உடல்நலம் குன்றியது. அதனைத் தொடர்ந்து ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவந்தி நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட சுபாஷன் ரெட்டியின் உடல், இன்று மதியம் ஜூபிலி ஹில்ஸில் உள்ள மகாபிரஸ்தனத்தில் இறுதி சடங்கு நடைபெறுகிறது.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், நீதியரசன் சுபாஷன் ரெட்டியின் மறைவுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்துள்ளார்.

சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகவும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் சிறப்பான பணியை ஆற்றியவர் சுபாஷன் ரெட்டி. அவரது மறைவுக்கு நீதித்துறையில் பணியாற்றி வரும் பல நீதியரசர்கள் தங்களது இறுதி அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

சிங்கப்பூரில் லஞ்சப்புகாரில் இந்தியருக்கு சிறை
More News >>