பூமராங் இயக்குநருடன் இணைந்த சந்தானம்!

ஆர். கண்ணன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க நடிகர் சந்தானம் ஒப்பந்தமாகியுள்ளார்.

ஜெயம் கொண்டான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ஆர். கண்ணன். அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை ஈட்டியது. அடுத்து இவர் இயக்கத்தில் வெளியான கண்டேன் காதலை படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

இந்த படத்தில் நடிகர் சந்தானம் செய்த காமெடி கலாட்டா இன்றளவும் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படுகிறது.

அதனை தொடர்ந்து வந்தான் வென்றான், சேட்டை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படங்கள் ஆர். கண்ணனுக்கு தோல்வி படங்களாக அமைந்தன.

இதில், சேட்டை படத்தில் நடுப்பக்கம் நக்கி எனும் கதாபாத்திரத்தில் சந்தானத்தின் டபுள் மீனிங் காமெடி இளைஞர்களால் பெரிதளவில் ரசிக்கப்பட்டது. அமீர்கான் தயாரிப்பில் இந்தியில் வெளியான டெல்லி பெல்லி படத்தின் ரீமேக் தான் இந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர் தோல்விகளில் இருந்து தப்பிக்க கெளதம் கார்த்திக், ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் கண்ணன் இயக்கிய இவன் தந்திரன் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், தயாரிப்பாளர் சங்க ஸ்டிரைக்கின் போது படம் வெளியானதால், வசூல் ரீதியாக வெற்றியடைய வில்லை.

சமீபத்தில் அதர்வா, ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் கண்ணன் இயக்கிய பூமராங் படம் கண்ணனுக்கு மற்றுமொரு வெற்றி படமாகவே அமைந்தது.

இந்நிலையில், தற்போது நடிகர் சந்தானத்தை வைத்து புதிய படம் ஒன்றை கண்ணன் இயக்குகிறார். தனது சமூக வலைதள பக்கத்தில் இதுகுறித்த புகைப்படத்தை வெளியிட்டு கண்ணன் தனது அடுத்த படம் குறித்து அறிவித்துள்ளார்.

ஆக்‌ஷன் காமெடி படமாக உருவாகவுள்ள இந்த படத்தின் கதையை கேட்ட சந்தானம் விழுந்து விழுந்து சிரித்துவிட்டு உடனடியாக ஓகேயும் சொல்லிவிட்டாராம்.

மசாலா பிக்ஸ் மற்றும் எம்.ஆர்.கே.பி. புரொடக்‌ஷன்ஸ் இணைந்து உருவாக்கும் இந்த படத்தின் நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

மோடி கோஷம்; நிதிஷ் முகம் சுளிப்பு! பீகாரில் தே.ஜ. கூட்டணியில் அதிருப்தி!
More News >>