சாமியார் குர்மீத் சிங்கிற்கு10 ஆண்டுகள் சிறை நீதிபதியிடம் கண்ணீர்!

பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் ஹரியானா சாமியாருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஹரியானா மாநிலம் சிர்சாவில் தேரா சச்சா அமைப்பு இயங்கி வருகிறது. இந்த அமைப்பின் தலைவர் குர்மீத் ரஹீம் சிங், இரு பெண் துறவிகளை பாலியல் பலாத்காரம் செய்யதாக எழுந்த புகாரில் இரு நாள்களுக்கு முன் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்த ஹரியானாவில் நிகழ்ந்த வன்முறையில் 31 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், இன்று அவருக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டது. இதில், 10 ஆண்டுகள் அவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கிரிமினல் குற்றம், மற்றும் பெண்களுக்கு களங்கம் கற்பித்தல் ஆகிய பிரிவின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

தண்டனை விதிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன், நீதிபதியிடம் குர்மீத் கண்ணீர் விட்டு அழுததாகச் சொல்லப்படுகிறது. சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி குர்மீத் அடைக்கப்பட்டிருந்த ரோக்டக் மாவட்ட சிறைக்கே நேரடியாகச் சென்று தீர்ப்பளித்தார்.

More News >>