அடக் கொடுமையே...! பாஜகவின் வித்தியாசமான மே தின கொண்டாட்டம்!
உலகம் முழுவதும் இன்று மே தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் நடைபெற்ற தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டம் மற்றும் தியாகிகளின் தியாகங்களை போன்றும் வகையில் இன்று உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில், சென்னையில்தான் முதன் முதலாக மே தினம் கொண்டாடப்பட்டது.
மே தினத்தை முன்னிட்டு பல்வேறு தலைவர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அதிமுக, திமுக, தேமுதிக, காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான கட்சி அலுவலகங்களில் மே தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், சமூக ஊடகங்களில் எதிர்ச்சியாக ஒரு பதிவு கண்ணில் பட்டது. அப்போது, தான் தெரிந்தது பாஜகவினர் இவ்வாறு மே தினத்தைக் கொண்டாடி வருகின்றனர் என்று. ஆங்கிலத்தில்,’’Modii Amithsha Yogi’’ என்று குறிப்பிட்டு ‘மே தின வாழ்த்துக்களை என பகிர்ந்து வருகின்றனர். ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இதனை பாஜக ஆதரவாளர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர். ஆனால், நெட்டிசன்களோ கருக வறுத்தெடுத்து வருகிறார்கள்.
’’Modii Amithsha Yogi’’ என சமூக வலைதளங்களில் வித்தியாசமான முறையில் பாஜகவினர் மே தினத்தை கொண்டாடி வருகின்றனர்.
திரிணாமுல் எம்எல்ஏக்கள் 40 பேர் எங்களுடன் தொடர்பில் உள்ளனர் - மம்தாவுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை