சுவையான பச்சை பட்டாணி சூப் ரெசிபி

அனைவருக்கும் பிடித்த பச்சை பட்டாணி சூப் எப்படி செய்வது என்று பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

பச்சை பட்டாணி - 2 கப்

தக்காளி - 3

எலுமிச்சை பழம் - ஒன்று

பூண்டு - 10 பல்

கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்

மக்காச்சோளம் மாவு - 2 டேபிள்ஸ்பூன்

பால் - கால் கப்

மிளகுத்தூள்

உப்பு

செய்முறை:

முதலில் பச்சை பட்டாணியை நன்றாகக் கழுவிக்கொள்ளவும் பிறகு அகலமான பாத்திரத்தில் பச்சைப்பட்டாணி பூண்டு தக்காளியைப் போட்டு அதனுடன் 3 கப் தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் வேக விடவும்.

பட்டாணி கலவையை வந்ததும் ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.பிறகு ஒரு சிறிய கிண்ணத்தில் மக்காச் சோள மாவை கால் விட்டு நன்கு கரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.

அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி மேலும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கவும் இதனுடன் கரம் மசாலா உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

கொதிக்க ஆரம்பித்ததும் மக்காச்சோளம் மாவு கரைசலை கொஞ்சம் கொஞ்சமாக கலந்து ஏழு நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.

கலவை சிறிது கெட்டியான பிறகு எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.

இறுதியாக மிளகுத்தூள் தூவி பரிமாறினால் சுவையான பச்சை பட்டாணி சூப் ரெடி..!

More News >>