சுவையான பன்னீர் பட்டாணி குருமா ரெசிபி

சப்பாத்தி பரோட்டாவிற்கு ஏற்ற சைட்டிஷ் பன்னீர் பட்டாணி குருமா எப்படி செய்றதுனு பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

பன்னீர் 200 கிராம்

காய்ந்த பட்டாணி அரை கப்

வெங்காயம்-1

தக்காளி-2

முந்திரிப்பருப்பு - 8

கரம் மசாலா அரை டீஸ்பூன்

கொத்தமல்லி இலை சிறிதளவு

எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்

பூண்டு-10 பல்

இஞ்சி - சிறிய துண்டு

பச்சை மிளகாய் - 7

சீரகம் - ஒரு டீஸ்பூன்

மிளகு - அரை டீஸ்பூன்

சோம்பு - ஒரு டீஸ்பூன்செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை பருகியதும் அதில் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து நன்றாக கிளறி வேகவிடவும். கூடவே தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.

தக்காளி கலவை நன்றாக வெந்ததும், முந்திரி பருப்பை சேர்த்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

மற்றொரு வாணலியில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், சோம்பு, மிளகு, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து வதங்கியதும், மிளகாய் தூள் 2 டீஸ்பூன் மல்லித் தூள் இரண்டு டீஸ்பூன் சேர்த்து நன்றாக கிளறி அரைத்து வைத்த விழுதை சேர்த்து கிளறி வேகவிடவும்.

இந்த கலவை வெந்து கிரேவி பதத்திற்கு வந்ததும் பன்னீர் துண்டுகள், வேக வைத்த பட்டாணி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிளறவும்.

அத்துடன் கரம் மசாலா கால் டீஸ்பூன் உப்பு சேர்த்து கிளறி மேலும் ஐந்து நிமிடங்களுக்கு வேகவிடவும். இறுதியாக கொத்தமல்லித் தூவி இறக்கினால் சுவையான பனீர் பட்டாணி குருமா ரெடி..!

More News >>