ஆரோக்கியம் நிறைந்த ஆரஞ்சு வாழைப்பழ ஸ்மூத்தி ரெசிபி

உடலுக்கு நன்மை தரும் ஆரஞ்சு வாழைப்பழ ஸ்மூத்தி ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

பெரிய வாழைப்பழம் - ஒன்று

ஆரஞ்சு - 3

பால் - ஒன்றரை கப்

ஊற வைத்த பாதாம் - 5

சர்க்கரை - தேவையான அளவு

வெண்ணிலா எசென்ஸ் - சில துளிகள்

செய்முறை:

ஒரு மிக்ஸி ஜாரில் ஆரஞ்சு வாழைப்பழம் சர்க்கரை பாதாம் பால் வெண்ணிலா எஸ்ஸென்ஸ் ஆகியவை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

கட்டியில்லாமல் நன்றாக அரைத்ததும் எடுத்து டம்ளரில் ஊற்றி பரிமாறவும். தேவைப்பட்டால் ஃபிரிட்ஜில் வைத்து ஜில்லென்று குடிக்கலாம்.

அவ்வளவுதாங்க டேஸ்டி ஆரஞ்சு வாழைப்பழ ஸ்மூத்தி ரெடி..!

More News >>