ரயில் வருவதை பார்க்காமல் செல்பி எடுத்த 3 இளைஞர்கள் ரயிலில் அடிபட்டு பலி
உத்தர பிரதேசத்தில் ரயில் தண்டவாளத்தில் செல்பி எடுக்க முயன்ற 3 இளைஞர்கள் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிர் இழந்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் அலிகர்ஹ் மாவட்டத்தை சேர்ந்த 4 இளைஞர்கள் பானிபட் பகுதிக்கு திருமணத்துக்கு சென்றனர். சென்றனர். அப்போது அங்குள்ள ரயில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்துக் கொண்டு இருந்தனர். செல்பி எடுக்கும் ஆர்வத்தில் அந்த தண்டவாளத்தில் தங்களை நோக்கி அதிவேகமாக ரயில் வருவதை அந்த இளைஞர்கள் கவனிக்கவில்லை.
இதனால் ரயிலில் அடிபட்டு 3 இளைஞர்கள் உயிரிழந்தனர். நான்காவதாக இருந்த தினேஷ் என்ற இளைஞர் மட்டும் நூலிழையில் உயிர்தப்பினார். ரயில் வருவதை பார்த்த தினேஷ் மற்ற மூவரையும் எச்சரித்தும் அவர்கள் சுதாரிப்பதற்குள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தனர்.
மேலும் 3 ஊழிர்கள் சஸ்பெண்ட்: மெட்ரோ ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியது