டெல்லியில் பெண் டாக்டர் கழுத்தறுத்து கொலை: நண்பருக்கு போலீசார் வலை
டெல்லியில் பெண் மருத்துவர் ஒருவர் வீட்டில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தை சேர்ந்த 25 வயதான பெண் டாக்டர் கரிமா மிஸ்ரா, டெல்லி ரஞ்சீத் நகரில் வசித்தபடி மருத்துவ மேல் படிப்பு தேர்வுக்கு தயாராகி வந்தார். அவருடன் அவரது நண்பர் சந்திரபிரகாஷ் வெர்மா என்பவரும் வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று காலையில் கரிமா கழுத்தறுக்கப்பட்டு இறந்து கிடந்தார்.
தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார், பெண் டாக்டரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இறந்து போன கரிமா மிஸ்ராவுடன் தங்கியிருந்த சந்திரபிரகாஷ் மாயமாகி இருப்பதால், அவர் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். மேலும் உடன் தங்கியிருந்த மற்றொருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த படத்தோடு இதையெல்லாம் நிறுத்திக் கொள்ளுங்கள் முத்தையா ..! - தேவராட்டம் விமர்சனம்