கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: பேராசிரியர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கல்லூரி மாணவியிடம் தொடர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்த பேராசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.
நாகர்கோவிலில் உள்ள ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் ரஞ்சன் என்பவர் வரலாற்றுத் துறை எச்.ஓ.டி யாக உள்ளார். இவர் அதே துறையில் முதலாம் ஆண்டு மாணவி ஒருவரிடம் தொடர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட மாணவி கல்லூரி முதல்வர் மற்றும் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்ததோடு, குமரி மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் குமுதாவிடமும் புகார் கொடுத்தார். இதனையடுத்து குமுதாவின் அறிவுரையின்படி, நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பேராசிரியர் ரஞ்சன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள பேராசிரியர் ரஞ்சனை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
போலி மருத்துவரால் 5 மாத கர்ப்பிணி பலி