ஏப்ரலில் ஜி.எஸ்.டி வரி வசூல் ஒரு லட்சம் கோடி ரூபாய்!

ஏப்ரல் மாதத்தில் மட்டும் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் ஒரு லட்சத்து 13 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியுள்ளதாம்.

நாடு முழுவதும் ஒரே சீராக சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி.) கொண்டு வர காங்கிரஸ் ஆட்சியில் முயற்சிக்கப்பட்ட போது, பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. காரணம், மாநில அரசுகளுக்கு இழப்பு ஏற்படுவதுடன், ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கும் பொருட்களுக்கும் வரி விதிக்கப்பட்டது. ஆயினும் பா.ஜ.க. ஆட்சியில் இந்த ஜி.எஸ்.டி விதிப்பு வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டது.

தற்போது இந்த வரி வசூல் நன்கு அதிகரித்து மத்திய அரசுக்கு பெரிய வருவாயை ஈட்டித் தருகிறது. மத்திய வருவாய்த் துறை வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் ஜி.எஸ்.டி வரி வசூல் ஒரு லட்சத்து 13,865 கோடியை எட்டியிருக்கிறது. இதில் மத்திய ஜி.எஸ்.டி. 21,163 கோடி ரூபாய், மாநில ஜி.எஸ்.டி. 28,801 கோடி ரூபாய், ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி 54,733 கோடி ரூபாய் என வசூலாகியுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஜி.எஸ்.டி. வரி வசூல் ஒரு லட்சத்து 3,459 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஐந்து வருடத்தில் வாரணாசியில் ஒரேயொரு ரோடு போட்டார் மோடி! விளாசித் தள்ளும் பிரியங்கா!!
More News >>