மோடியின் ஆட்சியில் 942 குண்டுவெடிப்பு சம்பவங்கள்: ராகுல் காந்தி பதிலடி

கடந்த 5 ஆண்டுகளில் மோடியின் ஆட்சியின் கீழ் நாட்டில் குண்டுவெடிப்பு சம்பவங்களே நடக்கவில்லை என பெங்களூருவில் பிரசாரம் செய்த மோடி, முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார். நாட்டில் 2014-ம் ஆண்டுக்கு பிறகு 942 குண்டுவெடிப்பு சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பெங்களூருவில் கடந்த ஏப்ரல் 13ம் தேதி மோடி, பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது காங்கிரஸ் ஆட்சியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களை பெங்களூரு வாசிகள் மறக்க மாட்டார்கள். கடந்த 5 ஆண்டுகால பாஜக ஆட்சியில் நாட்டில் ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் கூட நடைபெறவில்லை என பிரசாரம் செய்தார்.

மோடியின் இந்த பிரசாரம் பொய் என FactChecker செய்தி வெப்சைட் மிகப்பெரிய கட்டுரையை எழுதியுள்ளது. அதனை மேற்கோள் காட்டி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், புல்வாமா, பதன்கோட், உரி, கட்சிரோலி மேலும் 942 குண்டுவெடிப்பு சம்பவங்கள் மோடி ஆட்சியின் கீழ் நடந்துள்ளது. ஆகையால் மோடி செவிகளை திறந்து நாட்டில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

Factchecker வெளியிட்டுள்ள கட்டுரையில் மோடி பிரதமராக பதவியேற்ற உடனே டிசம்பர் 28ம்தேதி 2014ம் ஆண்டில் பெங்களூரு சர்ச் தெருவில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். இருவர் படுகாயம் என ஓபனிங்கே மோடியின் பிரசாரம் பொய் என க்ளீன் போல்டு ஆக்கியுள்ளனர்.

மேலும், 2014ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை குண்டு வெடிப்பு சம்பவத்தால் 451 பேர் பலியாகியுள்ளதாகவும், 1,589 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அந்த கட்டுரை தெரிவித்துள்ளது.

தீயிட்டு எரித்தாலும் நீங்கள் தப்ப முடியாது மோடி ஜி! -ராகுல் விளாசல்
More News >>