ஆன்லைன் பதிவு தொடக்கம்...! TANCET நுழைவுத் தேர்வை அண்ணா பல்கலை., நடத்தும்!
பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு வரும் ஜுலை 3-ம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்குகிறது.
அண்ணா பல்கலைக்கு கீழ் செயல்படும் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை இந்த ஆண்டு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் எடுத்து நடத்துகிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று காலை 9 மணியளவில் தொடங்கியது. பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் www.tneaonline.in, www.tndte.gov.in என்ற இணையத்தளங்களின் மூலம் மே 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் பொறியியல் சேர்க்கை சேவை மையங்களை அணுகி விண்ணப்பிக்கலாம். இதற்காக, தமிழகம் முழுவதும் 42 சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் விவரங்களுக்கு, 044 22351014, 22351015 எண்களில் மாணவர்கள் தொடர்பு கொண்டு விளக்கம் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வைத் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் எடுத்து நடத்தும் நிலையில், எம்.இ., எம்.டெக் உள்ளிட்ட முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு AUCET என தனியாக நடத்தப்படாது என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார். முதுகலை பொறியியல் படிப்பிற்கான நுழைவுத்தேர்வை நடத்துவது குறித்து சூரப்பா தலைமையில் ஆலோசனை நடந்தது. இதனையடுத்து, முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான TANCET நுழைவுத் தேர்வை அண்ணா பல்கலைக்கழகமே நடத்தும் எனத் தெரிவிக்கப்பட்டது.
தோனி சரவெடி.. தாஹீர் சுழலடி.. சுருண்டது டெல்லி அணி; 80 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே இமாலய வெற்றி!