வைரலாகும் குட்டி அசினின் க்யூட் புகைப்படங்கள்!

நடிகை அசின் மகளின் க்யூட் புகைப்படங்கள் நேற்று இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்ட நிலையில், அந்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகின்றன.

எம்.குமரன் சன் ஆஃப் மகாலக்‌ஷ்மி, கஜினி, போக்கிரி போன்ற பல வெற்றி படங்களில் நடித்த நடிகை அசின், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பான் இந்திய நடிகையாக கலக்கி வந்தார்.

பின்னர், 2016ம் ஆண்டில் மைக்ரோமேக்ஸ் ஓனர் ராகுல் சர்மாவை திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு குடும்பத்தை கவனித்து வருகிறார்.

2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடிகை அசினுக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குட்டி ஏஞ்சலுக்கு அரின் என பெயர் வைத்தார் அசின். இந்நிலையில், நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகள் அரினின் க்யூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் அசின் பதிவிட்டார்.

அந்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாக அசின் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றன.

`நீங்க நினைக்கிற மாதிரி இல்ல' - கிரிக்கெட் வாரியத்தின் பதிவால் அதிர்ந்த ஆஸ்திரேலிய பௌலர்
More News >>