பிரியங்கா சோப்ராவின் மைத்துனரை மணந்த கேம் ஆஃப் த்ரோன்ஸ் நடிகை!
கேம் ஆஃப் த்ரோன்ஸ் நடிகை சோபி டர்னர் தனது காதலர் ஜோ ஜோனஸை லாஸ் வேகாஸில் திருமணம் செய்து கொண்டார்.
கேம் ஆஃப் த்ரோன்ஸின் இறுதி பாகம் இம்மாதத்துடன் முடிகிறது. இந்நிலையில், கேம் ஆஃப் த்ரோன்ஸில் சான்சா ஸ்டார்க் கதாபாத்திரத்தில் நடித்த சோபி டர்னர் தனது காதலர் ஜோ ஜோனஸை திருமணம் செய்து கொண்டார். பிரியங்கா சோப்ராவின் கணவர் நிக் ஜோனஸின் சகோதரர் தான் ஜோ ஜோனஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
லாஸ் வேகாஸில் நடைபெற்ற பில்போர்ட் இசை விருது விழாவில் பங்கேற்ற இருவரும், இசை விருது விழா நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திற்கு அருகிலேயே சர்ப்ரைஸாக இன்று தங்கள் திருமணத்தை செய்து கொண்டனர். மணப்பெண்ணின் தோழியாக பிரியங்கா சோப்ரா இந்த திருமணத்தில் கலந்து கொண்டார்.
பில்போர்ட் இசை விருது விழா கொண்டாட்டத்துடன் சோபி டர்னர் மற்றும் ஜோ ஜோனஸ் தம்பதியினரின் திருமண வைபவமும் சேர்ந்தே கொண்டாடப்பட்டு வருகிறது.
செக்யூரிட்டி பெண் அதிகாரியை கரம் பிடித்த தாய்லாந்து மன்னர்!