டிடிவி சின்னமாக இதை கேட்டிருக்கலாம்...செட்டப்செய்து பிரசாரம் செய்கிறார் ஸ்டாலின்! -தமிழிசை
திண்ணை பிரசாரம் என்ற பெயரில் ஸ்டாலின் திண்ணை நாடகம் செய்து வருகிறார் என விமர்சித்துள்ளார் தமிழிசை சௌந்தரராஜன்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி.தினகரன், ‘அதிமுக தொண்டர்கள் கட்டும் கரை வேஷ்டிகளை போன்று அமமுகவினர் கட்ட தடை விதிக்க வேண்டும், கட்சி கொடி ஒரே மாதிரி இருக்கிறது என்று தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளனர். வேண்டுமென்றால், கருப்பு, சிவப்பு நிறங்களுக்கு இடையில் ‘காவி’ நிறத்தை அதிமுக சேர்த்துக் கொள்ளட்டும். தமிழகத்தின் பிஜேபியின் ஓர் கிளையாக அதிமுக செயல்பட்டு வருகிறது’ என்று குற்றம்சாட்டிப் பேசினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், ‘அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்திடம், பரிசுப் பெட்டியை சின்னமாக கேட்டதற்கு பதிலாக பெங்களூர் சிறைக்கதவுகளை சின்னமாக கேட்டு பெற்றிருக்கலாம்’ என்று விமர்சித்துள்ளார்.
அதோடு, திமுக தலைவர் ஸ்டாலின் செட்டப்செய்து செய்து பிரசாரம் செய்து வருகிறார் என்றும் விமர்சித்திருக்கிறார். அவருடைய ட்விட்டர் பக்கத்தில்,`` திண்ணை பிரசாரம் என்ற பெயரில் ஸ்டாலின் திண்ணை நாடகம் செய்து வருகிறார். தன் கட்சியினரை ஏற்கனவே செட்டப்செய்து முன் தயாரித்த கேள்விகளுக்குப் பதில் கூறுவதாக நடிப்பு! மதுரை பிரசாரத்தின் போது டீ குடிக்க சென்று எதிரில் அழகிரி பனியனுடன் செல்பி எடுக்கச் செய்த செட்டப் நாடகம் இம்முறை ஓட்டப்பிடாரத்தில் திண்ணைப் பிரசாரமாக அரங்கேற்றம்’ என விமர்சித்திருக்கிறார் தமிழிசை.
முதியோருக்கு ரூ.2000..அமைப்பு சாரா தொழிலாளருக்கு ரூ.4000..கல்வி, விவசாய கடன் ரத்து..அமமுக தேர்தல் அறிக்கையில் தாராளம்