பால் சத்தான பானம் என்பது பொதுவான கருத்து. எந்தெந்த விதங்களில் பால் நம் உடலுக்கு நன்மை செய்கிறது என்பதை தெரிந்து கொண்டால் அதை சரியான விதத்தில் பயன்படுத்தலாம். இதோ, பாலில் அடங்கியிருக்கும் சத்துக்கள் எவை என்ற பட்டியல்:
சருமத்தை மிளிரச் செய்யும்:
'அழகாவதற்கு பால் குடிங்க' இன்னும் சில நாட்களில் இப்படி கூட நாம் விளம்பரங்களை பார்க்கக்கூடும். நம் சருமத்தை பளபளப்பாக மிளிரச் செய்யும் இயல்பு பாலுக்கு உள்ளது. பாலில் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் ஊட்டசத்துக்கள் இருப்பதால் அது சருமத்திற்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது. தினமும் இரண்டு குவளை (தம்ளர்) பால் அருந்துவது தோலுக்கு நல்லது.
பற்களை பாதுகாக்கும்:
பாலில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. கால்சியம். பல்லுக்கு கால்சியம் மிகவும் அவசியம். பல் சொத்தையாவதை தடுக்கக்கூடிய ஆற்றல் பாலுக்கு உள்ளது.
எலும்புக்கு பலம் தரும்:
குழந்தைகள் ஆரோக்கியமாக வளருவதற்கு பால் உதவுகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம். எலும்பு உறுதியாக இருப்பதற்குத் தேவையான சத்துக்களை பால் தருகிறது. குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் பால் நன்மை தரும். உடலில் கால்சியம் சத்தினை தக்க வைப்பதற்கு வைட்டமின் டி தேவை. வைட்டமின் டி பாலில் காணப்படுகிறது. இவ்வாறு எலும்பினை உறுதி செய்வதால் பெரியவர்களுக்கும் பால் அவசியம்.
தசை வளர்ச்சிக்கு உதவுகிறது:
பாலில் புரோட்டீன் என்னும் புரதச் சத்து அதிகம் உள்ளது. தடகள வீரர்கள் மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் அனைவரும் உடற்பயிற்சிக்குப் பிறகு பால் அருந்துகின்றனர். பால், உடல் தசை வளருவதற்கு காரணமாக அமைகிறது. உடற்பயிற்சி மற்றும் வேலை செய்வதன் மூலம் உடல் இழந்த ஆற்றலை மீண்டும் அளிக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் பாலில் காணப்படுகின்றன.
உடல் எடையைக் குறைக்கிறது:
தினமும் பால் அருந்தக்கூடிய பெண்கள், பால் அருந்தாத பெண்களைக் காட்டிலும் வடிவான உடலமைப்பை பெறுகின்றனராம். ஒரே ஒரு தம்ளர் போதும். ஆனால் உடலுக்கு நல்லதாக இருக்கவேண்டும் என்று நீங்கள் ஏதாவது ஒரு பானத்தை தேடுவீர்களானால், பால் மட்டுமே அதற்குப் பதிலாகும்.
உயர்இரத்த அழுத்தம் ஏற்படுவதையும், மூளையில் இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படுவதையும் தடுக்கும் தன்மை பாலுக்கு உண்டு. கல்லீரல் அதிகமாக கொலஸ்ட்ராலை உருவாக்கிவிடாமல் பால் கட்டுப்படுத்தும். சில அறிவியல் அறிஞர்கள், சில வகை புற்றுநோய்கள் உருவாவதை பால் தடுக்கக்கூடும் என்ற நம்பிக்கையில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
பாலில் உள்ள லாக்டோஸ் என்னும் பொருள் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். அந்தப் பிரச்னை இல்லாத அனைவரும் பாலை பருகலாம். இரவு உணவுக்குப் பிறகு பால் அருந்துங்கள். அது நல்லது!
வெறும் வயிற்றில் பழம் சாப்பிடுவது நல்லதா?