அடா ஷர்மாவின் அடுத்த அதிரடி என்ன தெரியுமா?

பாலிவுட் இயக்குநர் சென் குப்தா இயக்கத்தில் உருவாகவுள்ள மென் டு மென் படத்தில் திருநங்கையாக நடிகை அடா ஷர்மா ஒப்பந்தமாகியுள்ளார்.

விக்ரம் பாட் இயக்கத்தில் 2008ம் ஆண்டு வெளியான 1920 படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் அடா ஷர்மா.

சிம்புவின் இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்ட அவர், சமீபத்தில் பிரபுதேவா நடிப்பில் வெளியான சார்லி சாப்ளின் 2 படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்திருந்தார்.

தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து வரும் அடா கான், சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார்.

இந்நிலையில், தற்போது சென் குப்தா இயக்கத்தில் உருவாகவுள்ள மென் டு மென் படத்தில் திருநங்கையாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பெரும்பாலும் பெண் நடிகர்கள் திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்க ஒத்துக்கொள்ளமாட்டார்கள். ஆனால், அடா ஷர்மா இப்படியொரு முடிவை எடுத்துள்ளது பாலிவுட்டில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.

‘உணர்ச்சியை ஆழம் பார்த்தது...மனதால் ஜீவியை இறுக அணைத்தேன்’ – ‘ஜெயில்’ இசையில் நெகிழ்ந்த வசந்தபாலன்
More News >>